திருக்குறள்

1222.

புன்கண்ணை வாழி மருள்மாலை எங்கேள்போல் வன்கண்ண தோநின் துணை.

திருக்குறள் 1222

புன்கண்ணை வாழி மருள்மாலை எங்கேள்போல் வன்கண்ண தோநின் துணை.

பொருள்:

மயங்கும் மாலைப் பொழுதே! நீயும் எம்மைப் போல் துன்பப்படுகின்றாயே! எம் காதலர் போல் உன் துணையும் இரக்கம் அற்றதோ?.

மு.வரததாசனார் உரை:

மயங்கிய மாலைப்‌பொழுதே! நீயும் எம்மைப்போல் துன்பப்படுகின்‌றாயே! உன் துணையும் எம் காதலர் போல் இரக்கம் அற்றதோ?.

சாலமன் பாப்பையா உரை:

பகலும் இரவுமாய் மயங்கும் மாலைப்பொழுதே! என்னைப் போலவே நீயும் ஒளி இழந்த கண்ணோடு இருக்கிறாயே; உன் கணவரும் என் கணவரைப் போல் கொடியவரோ?.